Friday, June 29, 2018

fyterமுட்டையிடுபவை

                    fyterமுட்டையிடுபவை

இதில் வெளிவரும் முட்டையிடும் மீன்களுடன் ஒப்பிடும்போது குஞ்சுகளின் எண்ணிக்கை குறைவு இம்முறை இனப் பெருக்கம் சற்று எளிதானது. இதில் குஞ்சுகளின் வளர்ச்சி தாய் மீனின் வயிற்றுக்குள்ளேயே நடைபெற்று 4 வாரங்களுக்குப் பின்பே பிரசவிக்கப்படுகின்றன. கப்பி, கறுப்பு மொல்லி, கத்திவால், பிளாட்டி போன்றவை முக்கிய குஞ்சு பொரிக்கும் இனங்களாகும். சராசரியாக 50 – 100 குஞ்சுகளைப் பிரசவிக்கும் சரியான அளவு உணவு கொடுத்து எல்லா மீன்களுக்கும் முறையாகப் பராமரித்தால் ஒன்றை ஒன்று மீன்களே கொன்று திண்ணுவதைத் (தன் இனத்தைத் தானே உண்ணுவதைத்) தவிர்க்கலாம். மீன்களின் எண்ணிக்கையும் பெருகும்.
முட்டையிடும் மீன்களின் இனப்பெருக்கம்
ஆண், பெண் மீன்களில் தனித்தனி ஹார்மோன் சுரக்கின்றது. முட்டையிடுதலின் போது பெண் மீன்கள் நீரில் முட்டைகளை இடும் அதே நேரம் ஆண் மீன்கள் அம்முட்டையின் அருகே வந்து மீன் விந்தினை வெளியிடுகின்றன. இதன் மூலம் அம்முட்டைகள் தாய் மீனின் உடலுக்கு வெளியில் நீரிலேயே கருவுருகின்றன. அடைகாக்கும் முறையைப் பொறுத்து முட்டையிடும் மீன்கள் 5 வகையாகப் பிரிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment