Showing posts with label முத்துராமலிங்கத் தேவர் சீரும் சிறப்பு. Show all posts
Showing posts with label முத்துராமலிங்கத் தேவர் சீரும் சிறப்பு. Show all posts

Thursday, June 28, 2018

முத்துராமலிங்கத் தேவர் சீரும் சிறப்பு

முத்துராமலிங்கத் தேவர் 




குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமின் குடும்பத்தில் அக்டோபர் 30,1908-ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார் இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார் .அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மிண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பர்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
இளமைப்  பருவத்தில் தேவர்          
குழந்தைசாமிப்பிள்ளை என்கிற குடும்ப               நண்பரால் கல்வி                  பயிர்ருவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார் பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரிசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடுத்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முமுமையாக முடிக்க இயலவில்லை .தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்