Showing posts with label தேவரின் கன்னி பேச்சு. Show all posts
Showing posts with label தேவரின் கன்னி பேச்சு. Show all posts

Thursday, June 28, 2018

தேவரின் கன்னி பேச்சு

              தேவரின் கன்னி பேச்சு


            

1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாளிகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்ன்பவர் சுவாமி விவேகன்னந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார் .அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ்.இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருதார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்து கொண்டு பேச அழைத்தார்.
அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகனந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சேற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமாஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் ஊடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.